Delve deeper into the stories behind our work. Our blog features insightful articles, personal accounts, and success stories that showcase the real impact of our programs on individuals and communities. Join the conversation, share your thoughts, and stay inspired by the transformative journeys we share.
பகுதி 2: அதனால் முதல் நாள் புடவைக் கடைக்குச் சென்றபோது தீடீரென்று கடையில் விளக்கு போட்டதால் கண்ணில் கூச்சம் ஏற்பட்டு நான் சட்டென்று அருகிலுள்ள சகோதரியின் கையைப் பிடித்தேன். இதை கவனித்த மாப்பிள்ளை வீட்டார் உடனே எங்களிடம் இந்த கல்யாணம் சரிப்பட்டு வராது எனவே கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்றனர். அப்போதுதான் நான் நிலைகுலைந்து போனேன். எனது குறைப்பாட்டைவைத்து மிகவும் அவமானப்படுத்தினர். இனிமேல் திருமணம் செய்யவேண்டாம் என்ற முடிவுக்கு வந்தேன். பிறகு என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டியதை அறிந்தேன். பல வரன்களும் இப்படியே சென்றது. என் 25 வயதில் கண் மருத்துவரிடம் மீண்டும் சென்று பரிசோதித்தபோதுதான் எனக்கு “ Degenerative vision” இருப்பதாக சொன்னார்கள். எனவே அவர்களிடம் 70%”vision loss” என்ற மருத்துவ சான்றிதழை பெற்றுக் கொண்டேன். பின் என் அண்ணனின் நண்பர் மூலமாக “Karna vidya technology centre “ என்ற தன்னார்வக் குழுவில் Computer skills (soft skill development) என்ற பயிற்சி வகுப்பை பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பேராசிரியர் திரு. ரகுராமன் என்பவர் சொல்லி கொடுக்கிறார் என்பதை அறிந்து நானும் அங்கு சேர்ந்து பயில தொடங்கினேன். அப்போதுதான் எனக்குள் தன்னம்பிக்கை வந்தது. என்னைப் போன்றவர்களும் சேர்ந்து பயின்றார்கள்.
மேலும் “Employment Exchange Office,Guindy” என்ற அலுவலகத்தில் 45 நாட்கள் Assistant Director Mr. Kannan என்பவர் மூலம் “ Programme Training” பயிற்சி பெற்றேன். அதன்பின் TNPSC மூலம் Group 4 தேர்வு எழுதி வெற்றி பெற்று தற்போது Finance Dept., Govt., Data Centre, Nandanam , என்ற அலுவலகத்தில் J.A.வாக பணியாற்றி வருகிறேன். 2018ம் வருடம், நான் பார்வை குறைபாடு உள்ள தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணிபுரியும் திரு. ஹரிஹரன் என்பவரை திருமணம்
செய்து கொண்டேன். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். என் குடும்பத்திலுள்ள என் அம்மா, மாமியார், மாமனார், என் கணவர் என அனைவரும் எனக்கு முழு ஒத்துழைப்புடன்
உதவி செய்கின்றனர். 2020ல் Covidம் என்னை பெரிதும் பாதித்தது,, அப்போது எனக்கு பிரசவ நேரமாக இருந்ததாலும் அதற்குப்பின் குழந்தைப் பிறந்ததும் என்னுடைய கண் பார்வை முழுவதுமாக
இழந்தேன். எனினும் என் வேலைகளை நானே செய்து கொள்கிறேன்.
என் விருப்பம் எல்லாம் U.P.S.C., தேர்வு எழுதி வெற்றிபெற்று மேலும் உயர்ந்து வரவேண்டும் என்பதுதான். வாழ்க்கையில் பல சோதனைகள் வந்தாலும் மனம் தளராமல் அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்ற நேர்மறை செயல்களால் வெற்றிபெற வேண்டும் என்பதே என் லட்சியம். மற்றவர்கள் எத்தனை குத்திக்காட்டினாலும், அவமானப்படுத்தினாலும் அதை புறந்தள்ளி விட்டு விடா முயற்சி செய்து வெற்றி காண்பதே நமது லட்சியமாக என்னைப் போன்றவர்கள் செயல்பட வேண்டும் என்பதும் என் விருப்பமாகும்.
Softhelp was formed on 15th Aug 2007 that envisions an independent lifestyle by bringing sustainable solutions such as AI-enabled devices, standardized skill development in niche technologies, regular health monitoring, pregnant women care support, and rehabilitation for the visually impaired.